Some palam tamilar alavai | பழந்தமிழர் அளவைகளில் சில
◆ முகத்தல் அளவைகள் : ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லிட்டர். ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லிட்டர். ஒரு கலம் = அறுபத்து நாலரை லிட்டர். ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லிட்டர். ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு. ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லிட்டர். ஒரு பாலாடை = முப்பது மில்லி லிட்டர். ஒரு குப்பி = எழுநூற்றுமில்லி லிட்டர். ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம். முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு. ஐந்து சோடு = ஒரு ஆழாக்கு. இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு. இரண்டு உழக்கு = ஒரு உரி. இரண்டு உரி = ஒரு நாழி. எட்டு நாழி = ஒரு குறுணி. இரண்டு குறுணி = ஒரு பதக்கு. இரண்டு பதக்கு = ஒரு தூணி. மூன்று தூணி = ஒரு கலம். ◆ நிறுத்தல் அளவைகள் மூன்றே முக்கால் குன்றி மணி எடை = ஒரு பனவெடை. முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை = ஒரு விராகன் எடை. பத்து விராகன் எடை = ஒரு பலம். இரண்டு குன்றி மணி எடை = ஒரு உளுந்து எடை. ஒரு ரூபாய் எடை = ஒரு தோலா. மூன்று தோலா = ஒரு பலம். எட்டு பலம் = ஒரு சேர். நாற்பது பலம் = ஒரு வீசை. ஐம்பது பலம் = ஒரு தூக்கு. இரண்டு தூக்கு = ஒரு துலாம். ஒரு குன்றி எடை ...