Attention those traveling in AC cars | ஏசி காரில் செல்பவர்கள் கவனத்திற்கு.
Awareness Post - விழிப்புணர்வு பதிவு..! * வாகன குளிரூட்டி AC யுடன் தொடர்புடைய கீழ்க்காட்டப்பட்ட ஒரு பட்டன் காணப்படும். இது ஆன் செய்துள்ள போது வாகனத்தின் உள்ளே உள்ள காற்றை எடுத்து குளிரூட்டும். * இதை ஆஃப் செய்துள்ள போது வெளியில் இருந்து காற்றை எடுத்து குளிரூட்டும். * நாம் வாகனம் செலுத்தும் போது வெளியில் இருந்து காற்றை எடுப்பதால் குளிரூட்டுவது சற்று குறைவாக இருப்பதாலும் வெளியில் இருந்து வேறுவித வாசனைகள் உள்ளே வருவதாலும் அநேகமாக எல்லோரும் காருக்குள்ளேயே இருக்கும் காற்றை குளிரூட்டும்(Internal cooling) பட்டனை ஆன் நிலையிலேயே வைத்திருப்போம். * ஆனால் நீண்டதூரம் பயணம் செய்யும் போதோ அல்லது நிறைய நபர்கள் பயணம் செய்யும் போதோ உள்ளே உள்ள காற்றை எடுத்து குளிரூட்டும் சந்தர்ப்பத்தில் உள்ளே ஆக்ஸிஜன் அளவு குறைந்து நம் சுவாசம் காரணமாக கார்பன்டை ஆக்ஸைடு அதிகரித்து காணப்படும். *இந்த வேளையில் வாகனம் செலுத்துபவருக்கு அதிக கொட்டாவி நித்திரை மயக்கம் உடல் சோர்வு என்பன ஏற்படும்... * இந்த வேளையிலேயே நாம் வாகனத்தை விட்டு வெளியில் வந்து கால் கையை அசைப்பதாலோ அல்லது முகம் கழுவுவதாலோ அல்லது ஒரு கடைக்கு சென்று ஒரு தேநீர...