Posts

Showing posts with the label 1 TMC Water

What is 1 TMC of water | 1 டிஎம்சி தண்ணீர் என்றால் என்ன?

 1 டிஎம்சி  தண்ணீர் என்றால் என்ன ஒரு நிமிடம் இதை படித்து பாருங்கள். செய்தியை சரியாக சொல்லுவது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியமானது அந்த செய்தி சாமான்யனுக்கும் புரியும் அளவில் இருக்கவேண்டும் அண்மைக்காலத்தில் பெரும்பாலானோரை பேச வைக்கும் விஷயம். காவிரி ஆறும் அது தொடர்பாக ஆண்டுக்கணக்கில் நடந்த சட்டப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பும்.. காவிரி மேலாண்மை ஆணையம், அது செயல்படப்போகிற விதங்களையெல்லாம் விட்டுவிடுவோம். அதைவிட முக்கியமானது கர்நாடக அணைகள், காவிரி ஆறு, மேட்டூர் அணை, டிஎம்சி போன்றவை தொடர்பான விஷயங்கள் பற்றி ஒரு பாமரனுக்கு எளிதான புரிதல் முயற்சியை செய்வோம். தமிழகத்தில் திருச்சி கல்லணையில் காவிரி, கொள்ளிடம் என பிரிந்துபோய் இருவேறு இடங்களில் கடலில் கலக்கிறது. அதே காவிரிதான், கர்நாடகாவில் வெவ்வேறு இடங்களில் உற்பத்தியாகி பின்னர்தான் முழுமையான காவிரியாக உருவெடுக்கிறது. கர்நாடகம் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிட்டால் அதை தமிழகம் வாங்கி வைத்து தேக்குகிற ஒரே இடம் சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைதான். இந்த மேட்டூருக்கு எப்படி தண்ணீர் வருகிறது என்று பார்ப்...