Every proverbial word spoken by the ancestors has meanings | முன்னோர்கள் சொன்ன ஒவ்வொரு பழமொழி வார்த்தைகளிலும் அர்த்தங்கள் உள்ளது.

முன்னோர்கள் சொன்ன ஒவ்வொரு பழமொழி வார்த்தைகளிலும் அர்த்தங்கள் உள்ளது.

தவளை கத்தினால் மழை.
அந்தி ஈசல் பூத்தால் - அடை மழைக்கு அச்சாராம்.
தும்பி பறந்தால் தூரத்தில் மழை.
எறும்பு ஏறில் பெரும் புயல்.
மார்கழி மழை மண்ணுக்கு உதவாது.
தை மழை நெய் மழை.
மாசிப் பனி மச்சையும் துளைக்கும்.
தையும் மாசியும் வீடு மேய்த்து உறங்கு.
புற்று கண்டு கிணறு வெட்டு.
வெள்ளமே ஆனாலும்-பள்ளத்தே பயிர் செய்.
காணி தேடினும் கரிசல் மண் தேடு.
களர் கெட பிரண்டையைப் புதை.
கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி-கெட்ட குடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு.
நன்னிலம் கொழுஞ்சி
நடுநிலம் கரந்தை
கடை நிலம் எருக்கு.
நீரும் நிலமும் இருந்தாலும்
பருவம் பார்த்து பயிர் செய்.
ஆடிப்பட்டம் பயிர் செய்.
விண் பொய்த்தால் மண் பொய்க்கும்.
மழையடி புஞ்சை
மதகடி நஞ்சை.
களரை நம்பி கெட்டவனும் இல்லை மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை.
உழவில்லாத நிலமும்
மிளகில்லாத கறியும் வழ வழ.
அகல உழவதை விட
ஆழ உழுவது மேல் .
புஞ்சைக்கு நாலு உழவு
நஞ்சைக்கு ஏழு உழவு.
குப்பை இல்லாத வெள்ளாமை சப்பை.
ஆடு பயிர் காட்டும்
ஆவாரை கதிர் கட்டும்.
கூளம் பரப்பி கோமியம் சேர் .
ஆற்று வண்டல் தேற்றும் பயிரை.
நிலத்தில் எடுத்த பூண்டு
நிலத்தில் மடிய வேண்டும்.
காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும்.
தேங்கி கெட்டது நிலம்
தேங்காமல் கெட்டது குளம்.
கோரையை கொல்ல கொள்ளுப் பயிர் விதை.
சொத்தைப் போல்
விதையை பேண வேண்டும்.
விதை பாதி வேலை பாதி.
காய்த்த வித்திற்கு பழுது இல்லை.
பாரில் போட்டாலும் பட்டத்தில் போடு.
கோப்பு தப்பினால்
குப்பையும் பயிராகாது.
ஆடி ஐந்தில் விதைத்த விதையும் புரட்டாசி பதினைந்தில் நட்ட நடவும் பெரியோர்கள் வைத்த தனம்.
கலக்க விதைத்தால்
களஞ்சியம் நிறையும்.
அடர விதைத்தால் போர் உயரும்.
உழவே_தலை.
தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்.
நீர் இன்றி அமையாது உலகு.
"என் மக்கள்"
கடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம்.
கடைசி மரமும் வெட்டி உண்டு
கடைசி மரமும் விஷம் ஏறிக்
கடைசி மீனும் பிடி பட
அப்போதுதான் உறைக்கும்.
இனி பணத்தைச் சாப்பிட
முடியாது என்பது!!
ஆறும் குளமும் மாசு அடைந்தால்
சோறும் நீறும் எப்படி கிடைக்கும்!.
நீர் நிலைகளை காப்போம்.
இணைவோம்.
நம் மூத்த முன்னோர் சொல்மிக்க மந்திரமில்லை.
மேழிச் செல்வம் கோழை படாது...
முன்னோர்கள் சொன்ன ஒவ்வொரு பழமொழி வார்த்தைகளிலும் அர்த்தங்கள் உள்ளது.

Comments

Popular posts from this blog

27 Nakshatra Trees | 27 நட்சத்திர விருட்சங்கள்

34 species of palm trees | பனை மரத்தில் மொத்தம் 34 வகை இருக்கின்றன.

Simple explanations for children to teach Tamil without spelling mistakes | எழுத்துப்பிழை இல்லாமல் தமிழ் சொல்லி தர பிள்ளைகளுக்கு சில விளக்கங்கள்