The traditional rice varieties of the day in the case of the forefathers | முன்னோர்களின் வழக்கிலிருந்த அன்றைய பாரம்பரிய நெல் ரகங்கள்
#முன்னோர்களின்_வழக்கிலிருந்த_அன்றைய_பாரம்பரிய_நெல்ரகங்கள்...!!!
#நெல்லின் தொடக்கம்
பல்லாயிரம் ஆண்டுகளாக நெல் பயிர் சாகுபடி நமது முன்னோர்கள் செய்து வந்ததாக பல சான்றுகள் கூறுகின்றன.
#தன்மை
உள்ளூர் சூழல், நில அமைப்பு, காற்று, வறட்சி, பனிப்பொழிவு, வெள்ள பாதிப்பு மற்றும் பல இயற்கை சீற்றங்களை தாங்கி வளரக்கூடிய பல்வேறு வகையான பாரம்பரிய நெல் ரகங்கள் நம்மிடம் இருந்தன.
#உழவர்களே விஞ்ஞானிகள்
காலம் காலத்துக்கும் இந்திய உழவர்களே விஞ்ஞானிகளாக இருந்து நிலத்துக்கும் பருவத்துக்கும் பயன்பாட்டிற்கும் ஏற்ற ஒரு லட்சத்து 40 ஆயிரம் நெல் ரகங்களைக் கண்டு வைத்திருக்கிறார்கள்.
#விதையே ஆயுதம்
ஆனால் இன்றோ நம்மிடம் மிஞ்சி இருப்பது சில ரகங்கள் ஏனைய ரகங்கள் நவீன வேளாண் புரட்சியின் மோகத்தால் அழிந்துவிட்டன. இருப்பதையாவது நாம் மீட்டெக்க வேண்டும்.
வளர்ந்து விளையும் வரப்புக் குடைஞ்சான், வறட்சி தாங்கி விளையும் வாடஞ்சம்பா, உடல் உழைப்புக் குறைந்தோர் விரும்பி உண்ணும் கிச்சடிச் சம்பா, சீரகச் சம்பா, அகிலம் போற்றும் ஆற்காடு கிச்சடி, நெல்லை மக்கள் தலைமுறை தலைமுறையாகப் பயிரிட்ட கொட்டாரஞ்சம்பா, நீரிழிவு நோய்க்கு மருந்தாகும்.
விளையும் தன்மை....
ஆறு மாதத்தில் விளையும் வாடன் சம்பா, கட்டைச் சம்பா, மாப்பிள்ளைச் சம்பாவும் இருந்தன. ஐந்து மாதத்தில் விளையும் கிச்சடிச் சம்பா, கார்த்திகைச் சம்பா இருந்தன. மூன்று மாதத்தில் விளையும் குள்ளக்கார், கருங்குறுவை, செங்குருவை, செங்கல்பட்டுச் சிறுமணி இருந்தன. ஈரக்கசிவிலேயே விளைச்சலுக்கு வரும் உவர் மொண்டானும், வெள்ளத்திற்கு மேல் கதிர் நீட்டும் மடுமுழுங்கியும் இருந்தன. அறுபது நாளில் விளையும் அறுபதாம் குருவை இருந்து. 70 நாளில் விளையும் பூங்கார் இருந்தது.
சில ரகமும் அதன் சிறப்பும்...
கருப்பு அரிசி, சிவப்பரிசி, நீராகர ருசிக்காகப் பயிர் செய்யப்பட்ட சம்பா, மோசணம், குரங்கு பிடிப்பது போல மணி பிடித்த குரங்குச் சம்பா, மணம் கமழும் இலுப்பைப்பூச் சம்பா, புட்டு செய்வதற்கு ஏற்ற கவுணி, குமரி மாவட்ட மக்கள் விரும்பி உண்ணும் கட்டிச் சம்பா, இப்படி ஏராளமான நெல் ரகங்கள் இருந்தன.
#அரிசிஉணவு...
அரசி உணவுவகைகள் நமது வாழ்வில் முக்கிய உணவு அங்கமாக உள்ளது. அதில் மாவுப்பொருள், வைட்டமின், புரோட்டீன் இரும்பு, மெக்னீசியம் என பல சத்துபொருள் அடக்கம். ஆனால் அதையும் நவீன அறிவியல் காரணமாக தீட்டி பயன்படுத்துவதால் அதில் இருக்கும் அனைத்து சத்தையும் மருத்துவ குணங்களையும் இழந்து வெறும் சக்பையை சாப்பிடுகிறோம்.
உயரத்திற்கு ஏற்ற நெல் ரகங்கள்
2 அடிக்கு சடார், 3 அடிக்கு அறுபதாம் குருவை, 4 அடிக்கு பூங்கார், 5அடிக்கு சீரக சம்பா, 6அடிக்கு ரோஸ்கார், 7அடிக்கு சிவப்பு குடை வாழை, 8அடிக்கு காட்டுயானம் மற்றும் மாப்பிள்ளை சம்பா என உயரத்துக்கு ஏற்ற பயிர் வகைகள் உள்ளன.
#அளவீடு
சன்னம், மோட்டோ, நீளம், சிறிது உருண்டை என பல அளவீட்டில் உள்ளது.
#நிறங்கள்
வெள்ளை, மஞ்சள், சிகப்பு, கருப்பு, பழுப்பு என பல நிறத்தில் உள்ளன.
வளரும் நாட்கள்
60நாள், 65, 70, 90, 100, 110, 120, 130, 140, 150, 160, 180நாள்களில் விளையும் நெல் ரகங்களும் உள்ளன. சில மலை ரகங்கள் 9 மாதம் காலம் விளைய எடுத்துக்கொள்ளுமாம்.
#மருத்துவகுணங்கள்...
வாதம், பித்தம், கபம், காய்ச்சல், பித்த ரோகம், சிரஸ்தாபம், உஷ்ணம், குஷ்டம், விஷம், எலும்பு முறிவு, நியாபகம் சக்தி, மந்தம், சர்க்கரை நோய், குடல் சுத்தி, சொறி, சிரங்கு, பிசி எடுக்க, அஜீரணம் என பல வகையான நோய் தொந்தரவுகளில் இருந்து நலம் பெறவும் பலம், உடல் சுத்தி ஆரோக்கியம் கூட என பல வகையான பாரம்பரிய ரகங்களை நம் முன்னோர்கள் பயன்படுத்தினார்கள். சிகப்பு மற்றும் கருப்பு நிற அரிசிவகைகள் அதீத மருத்துவ குணங்கள் நிறைந்ததாக கருதப்படுகிறது.
#பயன்பாடு
பல வகையான உணவு வகைகள் செய்யவும் சாப்பாடு, சிற்றுண்டி பலகாரம், அவல், பொரி, கஞ்சி, நீராகாரம், சுவை, பூஜைக்கான என தனித்தனி பயன்பாடுகளுக்காவும் பல ரகங்கள் உள்ளன.
#சம்பாவகைகள்
அரும்போக சம்பா,
இராவணன் சம்பா,
இலுப்பைப்பூ சம்பா,
ஈர்க்குச் சம்பா,
கட்டை சம்பா,
கப்பச்சம்பா,
கருடன் சம்பா,
கருப்புச் சீரக சம்பா,
களர்சம்பா,
கர்நாடக சீரக சம்பா,
கல்லுண்டைச் சம்பா,
காடைச் சம்பா,
காளான் சம்பா,
கார்த்திகை சம்பா,
குண்டுச் சம்பா,
குறுஞ்சம்பா,
குன்றிமணிச்சம்பா,
கைவரச்சம்பா (தங்கச் சம்பா),
கோடைச் சம்பா,
கோரைச் சம்பா,
சம்பா மோசனம்,
சடைச் சம்பா,
சிவப்பு சீரகச் சம்பா,
செஞ்சம்பா,
தோட்டச் சம்பா,
பெரிய சம்பா,
புனுகுச் சம்பா,
புழுகுச் சம்பா,
பூஞ்சம்பா,
மல்லிகைப்பூ சம்பா,
மணிச் சம்பா,
மிளகுச் சம்பா,
மைச்சம்பா,
நரிக்குருவை நீலச்சம்பா,
வளைத்தடிச் சம்பா,
வாடன் சம்பா,
வாலான் சம்பா,
வெள்ளை சீரக சம்பா...
#கார்ரகங்கள்
கப்பகார்,
கார்நெல்,
குள்ளக்கார்,
செங்கார்,
பெங்களூர்கார்,
பெருங்கார்,
பெரிய நெல்,
புழுதிக்கார்,
திருத்துறைப்பூண்டி கார்,
பூங்கார்,
முட்டக்கார்,
ராமக்குறிக்கார்,
ரோஸ்கார்....
மற்றவை
அறுபதாம் குருவை..
ரோஸ்கார்
களிமண் பகுதிக்கு ஏற்றது. நீருக்குள் மூழ்கி இருந்தாலும் வளரும்.
வளைத்தடிச் சம்பா
வாதம், பித்தம், உப்பசம், ரோகம் தீர்க்கும்.
வாடன் சம்பா
160 நாள் வயது. மோட்டா ரகம். வறட்சி தாங்கி வளரும். சிற்றுண்டிக்கு ஏற்றவை.
வாலான் சம்பா
தேக பொழிவு பெறும்.
வைகுண்டா
150 நாள் வயது. பொரிக்கு ஏற்றவை.
#குறிப்பு: இந்த தகவல்கள் எல்லாம் சிலரின் அனுபவ பதிவுகள். இடத்துக்கு இடம் சூழலுக்கு சூழல் இதன் பெயர் மற்றும் தன்மை, கால வயது எல்லாம் மாறியிருக்கும். 1 மாத காலமாக இந்த பதிவை தயார் செய்ய சில புத்தகங்களும் உதவின அவைகளை கொண்டு விதைகளை விதைப்போம், செவ்வனே அறுவடை செய்து, வயிற்றுக்கு அமுதூட்டுவோம்..
இயற்கை அளித்த பல பாரம்பரிய ரகங்கள் இன்று நம்மிடம் காணாமல்போனது, இருக்கும் எஞ்சிய சில ரகங்களை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கடத்தவேண்டிய கடமை நமக்கு உண்டு.
இதனை குறித்து தெரியாதவர்களுக்கான பதிவு...பகிருங்கள் பிறரும் அறிய..!!!
Comments
Post a Comment