Posts

Showing posts from November, 2022

Our navel is a wonderful gift from our creator | நம் தொப்புள் என்பது நம்மை படைத்தவர் நமக்கு கொடுத்துள்ள அற்புத பரிசு.

நம் தொப்புள் என்பது நம்மை படைத்தவர் நமக்கு கொடுத்துள்ள அற்புத பரிசு... 62 வயது முதியவர் ஒருவருக்கு இடது கண் பார்வை மிக மோசமாக இருந்தது. இரவு நேரங்களில் மிகவும் சிரமப்பட்டார். கண் மருத்துவர் பரிசோதனை செய்துவிட்டு அவரது கண்கள் மிகவும் நன்றாக இருப்பதாகவும் ஆனால் கண்களுக்கு இரத்தம் கொண்டு வரும் நரம்புகள் வறண்டு விட்டதால் மீண்டும் பார்வை ஒருபோதும் வராது என்றும் கூறிவிட்டார். *அறிவியல் படி, கருவுற்றவுடன் முதல் அணு உருவாகும் இடம் தொப்புள் தான்.* தொப்புள் உருவானவுடன், அது தாயின் நஞ்சுக்கொடியுடன் தொப்புள் கொடி மூலம் இணைக்கப்படுகிறது. *நமது தொப்புள் உண்மையிலே ஆச்சரியப்படும் ஒன்று தான்.* அறிவியல் படி, ஒரு மனிதன் இறந்தவுடன் 3 மணி நேரத்திற்கு தொப்புள் வெதுவெதுப்பாக இருக்குமாம். காரணம் *ஒரு பெண் கருவுற்றதும், பெண்ணின் தொப்புள் மூலம் குழந்தையின் தொப்புள் வழியாக கருவிலுள்ள குழந்தைக்கு ஊட்டச்சத்து வழங்கப்படும்.* முழுமையாக ஒரு கரு குழந்தையாக உருவாவதற்கு 270 நாட்கள் அதாவது 9 மாதங்கள் ஆகின்றன. நமது உடம்பில் உள்ள அனைத்து நரம்புகளும் தொப்புளுடன் இணைவதற்கு இதுவே காரணம். *தொப்புளே நமது உடம்பின் குவியப்புள்ளி....

Unknown things about honey in Tamil | தெரிந்த தேனைப்பற்றி தெரியாத பல விடயங்கள்

Image
தேன் தெரிந்த தேனைப்பற்றி தெரியாத பல விடயங்கள் ! தேன் தானும் கெடாது தன்னுடன் சேரும் பொருளையும் கெட விடாது. தேன் சாப்பிடுவது நல்லது. அதை சரியான முறையில் சாப்பிட்டால் மிகவும் நல்லது. அதனால், தேனைப்பற்றிய சில அடிப்படை விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.  சுத்தமான தேனை பேப்பரில் ஊற்றினால், ஊறாது. முத்து போல உருண்டு நகரும் தண்ணீரில் இட்டால் கரையாமல் கம்பிபோல அடியில் போய்விடும். இதை நாய் முகராது. அதேபோல சுத்தமான தேனின் அருகில் எறும்பு வராது !!! வெற்றிலைக்கு போடும் சுண்ணாம்பை கொஞ்சம் உள்ளங்கையில் வைத்து கால் ஸ்பூன் தேனை வைத்து நன்றாக மத்தித்தால் உள்ளங்கை நன்றாக கொதிக்கும் அப்படி கொதித்தால் அது நல்ல சுத்தமான தேன் !!! காய்ச்சிய தேன், காய்ச்சாத தேன் என்று இரண்டு வகைகள் உண்டு.  தேனில் உள்ள பூவின் மணம் போவதற்காக இரும்பைக் காய வைத்து அதை தேனில் வைப்பார்கள்.  இது காய்ச்சிய தேன்.  இது கொஞ்சம் நீர்த்திருக்கும். இதை இரண்டு ஆண்டுகளுக்குள் பயன்படுத்த வேண்டும். காய்ச்சாத தேன், மஞ்சளாக கெட்டியாக இருக்கும். ஆண்டுக் கணக்காக வைத்திருந்தாலும் கெடாது !!! சுடுதண்ணீரில் தேனைக் கலந்து ப...

Simple explanations for children to teach Tamil without spelling mistakes | எழுத்துப்பிழை இல்லாமல் தமிழ் சொல்லி தர பிள்ளைகளுக்கு சில விளக்கங்கள்

Image
எழுத்துப்பிழை இல்லாமல் தமிழ் சொல்லி தர பிள்ளைகளுக்கு சில விளக்கங்கள்... "ண", "ன" மற்றும் "ந" எங்கெல்லாம் வரும்?  ஒரு எளிய விளக்கம் மூன்று சுழி “ண”,  ரெண்டு சுழி “ன” மற்றும் "ந" என்ன வித்தியாசம்? தமிழ் எழுத்துகளில்  ரெண்டு சுழி "ன" என்பதும், மூன்று சுழி "ண" என்பதெல்லாம் வெறும் பேச்சு வழக்கு. "ண" இதன் பெயர் டண்ணகரம், "ன" இதன் பெயர் றன்னகரம், "ந" இதன் பெயர் தந்நகரம் என்பதே சரி. மண்டபம், கொண்டாட்டம் – என எங்கெல்லாம் இந்த மூன்று சுழி "ணகர" ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து 'ட' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு "டண்ணகரம்" னு பேரு. (சொல்லிப் பாருங்களேன்!) தென்றல், சென்றான் – என எங்கெல்லாம் இந்த ரெண்டு சுழி "னகர" ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து 'ற' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு "றன்னகரம்" னு பேரு. (சும்மா சொல்லிப்பாருங்க!) இது ரெண்டும் என்றுமே மாறி வராது.. நினைவில் கொள்க.. மண்டபமா?...

27 Nakshatra Trees | 27 நட்சத்திர விருட்சங்கள்

Image
நட்சத்திர மரங்கள் விருட்ஷ சாஸ்திரத்தில் கூறிய படி உங்கள் நட்சத்திரம் பாதம் அறிந்து மரங்களை நடுங்கள். குறைந்த பட்சம் இரண்டு கன்றுகளாக நடுங்கள். தவறாமல் பேணி பாதுகாத்து வாருங்கள். உங்களின் வாழ்க்கை கண்டிப்பாக வளமை அடையும். நாடும் நலம் பெரும். அஸ்வினி 1 ம் பாதம் – காஞ்சிதை (எட்டி) 2 ம் பாதம் – மகிழம் 3 ம் பாதம் – பாதாம் 4 ம் பாதம் – நண்டாஞ்சு பரணி 1 ம் பாதம் – அத்தி 2 ம் பாதம் – மஞ்சக்கடம்பு 3 ம் பாதம் – விளா 4 ம் பாதம் – நந்தியாவட்டை கார்த்திகை 1 ம் பாதம் – நெல்லி 2 ம் பாதம் – மணிபுங்கம் 3 ம் பாதம் – வெண் தேக்கு  4 ம் பாதம் – நிரிவேங்கை ரோஹிணி 1 ம் பாதம் – நாவல் 2 ம் பாதம் – சிவப்பு மந்தாரை 3 ம் பாதம் – மந்தாரை 4 ம் பாதம் – நாகலிங்கம் மிருகஷீரிஷம் 1 ம் பாதம் – கருங்காலி 2 ம் பாதம் – ஆச்சா 3 ம் பாதம் – வேம்பு 4 ம் பாதம் – நீர்க்கடம்பு திருவாதிரை 1 ம் பாதம் – செங்கருங்காலி 2 ம் பாதம் – வெள்ளை 3 ம் பாதம் – வெள்ளெருக்கு 4 ம் பாதம் – வெள்ளெருக்கு புனர்பூசம் 1 ம் பாதம் – மூங்கில் 2 ம் பாதம் – மலைவேம்பு 3 ம் பாதம் – அடப்பமரம் 4 ம் பாதம் – நெல்லி பூசம் 1 ம் பாதம் – அரசு 2 ம் பாதம் – ஆச்சா 3 ...

34 species of palm trees | பனை மரத்தில் மொத்தம் 34 வகை இருக்கின்றன.

Image
பனை மரத்தில் மொத்தம் 34 வகை இருக்கின்றன. அவை, 1. ஆண் பனை 2. பெண் பனை 3. கூந்தப்பனை 4. தாளிப்பனை 5. குமுதிப்பனை 6.சாற்றுப்பனை 7. ஈச்சம்பனை 8. ஈழப்பனை 9. சீமைப்பனை 10. ஆதம்பனை 11. திப்பிலிப்பனை 12. உடலற்பனை 13. கிச்சிலிப்பனை 14. குடைப்பனை 15. இளம்பனை 16. கூறைப்பனை 17. இடுக்குப்பனை 18. தாதம்பனை 19. காந்தம்பனை 20. பாக்குப்பனை 21. ஈரம்பனை 22. சீனப்பனை 23. குண்டுப்பனை 24. அலாம்பனை 25. கொண்டைப்பனை 26. ஏரிலைப்பனை 27. ஏசறுப்பனை 28. காட்டுப்பனை 29. கதலிப்பனை 30. வலியப்பனை 31. வாதப்பனை 32. அலகுப்பனை 33. நிலப்பனை 34. சனம்பனை பனையிலிருந்து பெறப்படும் பயன்கள் : பனை உணவு பொருட்கள் : நுங்கு பனம் பழம் பூரான் பனாட்டு பாணிப்பனாட்டு பனங்காய் பனங்கள்ளு பனஞ்சாராயம் வினாகிரி பதநீர் பனங்கருப்பட்டி பனைவெல்லம் சில்லுக் கருப்பட்டி பனங்கற்கண்டு பனஞ்சீனி பனங்கிழங்கு ஒடியல் ஒடியல் புட்டு ஒடியல் கூழ் புழுக்கொடியல் முதிர்ந்த ஓலை பனை குருத்து உணவுப்பொருள் அல்லாதவை : பனை ஓலைச் சுவடிகள் பனை ஓலைத் தொப்பி குருத்தோலை வீட்டுப்பயன்பாட்டுப் பொருட்கள் : பனையோலை நீற்றுப் பெட்டி கடகம் பனைப்பாய் கூரை வேய்தல் வேலியடைத்தல் பனைப்ப...