Understanding of health | உடல்நலம் பற்றிய புரிதல் நம்மிடம் உள்ளதா?
விழிப்புணர்வு பதிவு
* நோயெதிர்ப்பு சக்தியை அளிக்கும் இளநீர், பதநீர் இருக்க, வெளிநாட்டு குளிர்பானங்கள் எதற்கு
* கரும்பினால் ஆன வெல்லம், பனையால் ஆன பனஞ்சர்க்கரை, கல்கண்டு, கருப்பட்டி இருக்க, வெள்ளை விஷசர்க்கரை எதற்கு
* வியர்க்குரு போக்க நுங்குநீர் இருக்க, நைசில் பவுடர் எதற்கு
* கொஞ்சும் அழகு தரும் பயத்தம்மாவு, மஞ்சள், சந்தனம் இருக்க, அந்நிய பேர்அண்ட்லவ்லி எதற்கு
* எள்எண்ணெய், நல்லெண்ணெய் இருக்க அந்நிய ஆலிவ்ஆயில் எதற்கு
* தேங்காயெண்ணை இருக்க பாராசூட் ஆயில் எதற்கு
* இயற்கை மா, பலா, வாழை, கொய்யா இருக்க, வெளிநாட்டு ஆப்பிள், கிவி, ஆப்ரிகார்ட் எதற்கு
* நம்மூர் நிலக்கடலை இருக்க, பாதாம், பிஸ்தா எதற்கு
* சத்துமிக்க கம்பு, கேழ்வரகு, சோளம் சிறுதானியங்கள் இருக்க, வெளிநாட்டு ஹார்லிக்ஸ், காம்பிளான், பூஸ்ட், போர்ன்விட்டா எதற்கு
* நம்மூர் நாட்டுமாடுகள் இருக்க, அரக்கனான ஜெர்சி மாடுகள் எதற்கு
* கறந்த பால் இருக்க, கலப்பட பாக்கெட் பால் எதற்கு
* பாரம்பரிய சீடையும், முறுக்கும் இருக்க அந்நிய நாட்டு பிஸ்கட் எதற்கு
* மின்சாரத்தைலம் இருக்க, அமர்தாஞ்சன் டைகர்பாம் விக்ஸ்வெப்போராப் எதற்கு
* இட்லி, தோசை இருக்க, பிட்சா, பர்கர் எதற்கு
* பாரம்பரிய இடியாப்பம் இருக்க அந்நிய நாட்டு நூடுல்ஸ் எதற்கு
* பாரம்பரிய கைகுத்தல் அரிசி இருக்க, சத்தில்லா கூர்தீட்டிய அரிசி எதற்கு
* பாரம்பரிய சுக்கு, இஞ்சி தெம்பு பானம் இருக்க அந்நிய நாட்டு நெஸ்லே, காஃபி பொடி எதற்கு
* உடலுக்கு நலம் தரும் மரசெக்கு எண்ணெய் இருக்க, ரீபைண்ட் ஆயில் எதற்கு
* விவசாயம் செய்ய இயற்கை உரம் இருக்க, களைக்கொல்லிகளும், விஷவீரியமிக்க உரங்கள் எதற்கு
* பலசத்துக்கள் உள்ள காய்கறிகள் இருக்க, வைட்டமின் மாத்திரைகள் எதற்கு
* சுகப்பிரசவம் இருக்க, சிசேரியன் எதற்கு
* பிறந்த குழந்தைக்கு சேய்நெய் இருக்க, ஜீனிதண்ணீர் எதற்கு
* உடலுக்கு தீங்கும், பக்கவிளைவுகளும் தராத நாட்டுமருத்துவம் இருக்க, ரசாயணத்தினால் ஆன நவீன மருந்துகளும், மருத்துவமும் எதற்கு
* பாரம்பரிய கேழ்வரகு, கம்பு, சோளம், அடைமாவு இருக்க பலவித கலப்பட கோதுமை, மைதா போன்ற மாவு பாக்கெட் எதற்கு
* அதிக சத்துக்களை தரும் நாட்டுக்கோழி இருக்க, பிராய்லர்கோழி எதற்கு
* உடலுக்கும் ஒவ்வாத, மண்ணிற்கும் ஒவ்வாத உரம் (உப்பு) கலந்த குப்பைகளை பிளாஸ்டிக் பைகளில் அடைத்து விற்பதை வாங்கும் நாமே மாறவேண்டும்..
* நம் மண்ணில் விளையும், பருவகால உணவுகளையே உண்பீர்..
* வயல்,
* வரப்பு,
* வயக்காடு,
* விதை நெல்,
* உழுதல்,
* நடவு,
* நாத்து,
* களையெடுத்தல்,
* உரமடித்தல்,
* மடை திறப்பு,
* கிணறு-ஆறு-ஏரி பாசனம்,
* ஏத்தம்,
* நீர் பாய்ச்சுதல்,
* விளை நெல்,
* கதிர்,
* அறுவடை,
* களத்து மேடு,
* கதிர் அடித்தல்,
* அம்பாரம்,
* உழவு,
* உழவு மாடு,
* ஏர் கலப்பை,
* உழவன்,
* காளை, பசு, கன்று,
என #விவசாயம் பற்றிய அரிச்சுவடி தெரியாத ஒரு #தலைமுறை வளர்கிறது என்பது மிகப்பெரிய சாபக்கேடு!!!
#குறிப்பு...
எதைப்பற்றியும் அறிந்திடாமல் வக்கனையாக (ருசியாக) உண்ண வேண்டி போட்டிபோட்டுக்கொண்டு முன்வருவார்கள்....
உழைப்பவனுக்கு மட்டுமே சோறு என்றால் என்னவாகும் உலகம்.....
பசியெடுத்தால் மட்டும் ருசித்து உண்ணுங்கள் , செரிமான கோளாறு ஏற்படாது,.. செரிமான பிரச்சனை வரலில்லையெனில், சர்க்கரைநோய் உங்களை நெருங்காது...
தாகமெடுத்தால் மட்டும் வேண்டியஅளவு தண்ணீர் அருந்துங்கள்.... உடல்கழிவுகள் தானாக வெளியேறும்..
வேர்வை வெளியேற நன்றாக உழையுங்கள், உறக்கம் தானாக உங்களை அணுகும்.. அதிகநேரம் உறங்குவதும் நல்லதல்ல..
ஆரோக்கியமான வாழ்வு வாழ்வீர்..!!
Comments
Post a Comment