Posts

34 species of palm trees | பனை மரத்தில் மொத்தம் 34 வகை இருக்கின்றன.

Image
பனை மரத்தில் மொத்தம் 34 வகை இருக்கின்றன. அவை, 1. ஆண் பனை 2. பெண் பனை 3. கூந்தப்பனை 4. தாளிப்பனை 5. குமுதிப்பனை 6.சாற்றுப்பனை 7. ஈச்சம்பனை 8. ஈழப்பனை 9. சீமைப்பனை 10. ஆதம்பனை 11. திப்பிலிப்பனை 12. உடலற்பனை 13. கிச்சிலிப்பனை 14. குடைப்பனை 15. இளம்பனை 16. கூறைப்பனை 17. இடுக்குப்பனை 18. தாதம்பனை 19. காந்தம்பனை 20. பாக்குப்பனை 21. ஈரம்பனை 22. சீனப்பனை 23. குண்டுப்பனை 24. அலாம்பனை 25. கொண்டைப்பனை 26. ஏரிலைப்பனை 27. ஏசறுப்பனை 28. காட்டுப்பனை 29. கதலிப்பனை 30. வலியப்பனை 31. வாதப்பனை 32. அலகுப்பனை 33. நிலப்பனை 34. சனம்பனை பனையிலிருந்து பெறப்படும் பயன்கள் : பனை உணவு பொருட்கள் : நுங்கு பனம் பழம் பூரான் பனாட்டு பாணிப்பனாட்டு பனங்காய் பனங்கள்ளு பனஞ்சாராயம் வினாகிரி பதநீர் பனங்கருப்பட்டி பனைவெல்லம் சில்லுக் கருப்பட்டி பனங்கற்கண்டு பனஞ்சீனி பனங்கிழங்கு ஒடியல் ஒடியல் புட்டு ஒடியல் கூழ் புழுக்கொடியல் முதிர்ந்த ஓலை பனை குருத்து உணவுப்பொருள் அல்லாதவை : பனை ஓலைச் சுவடிகள் பனை ஓலைத் தொப்பி குருத்தோலை வீட்டுப்பயன்பாட்டுப் பொருட்கள் : பனையோலை நீற்றுப் பெட்டி கடகம் பனைப்பாய் கூரை வேய்தல் வேலியடைத்தல் பனைப்ப...

Understanding of health | உடல்நலம் பற்றிய புரிதல் நம்மிடம் உள்ளதா?

விழிப்புணர்வு பதிவு * நோயெதிர்ப்பு சக்தியை அளிக்கும் இளநீர், பதநீர் இருக்க, வெளிநாட்டு குளிர்பானங்கள் எதற்கு * கரும்பினால் ஆன வெல்லம், பனையால் ஆன பனஞ்சர்க்கரை, கல்கண்டு, கருப்பட்டி இருக்க, வெள்ளை விஷசர்க்கரை எதற்கு * வியர்க்குரு போக்க நுங்குநீர் இருக்க, நைசில் பவுடர் எதற்கு * கொஞ்சும் அழகு தரும் பயத்தம்மாவு, மஞ்சள், சந்தனம் இருக்க, அந்நிய பேர்அண்ட்லவ்லி எதற்கு * எள்எண்ணெய், நல்லெண்ணெய் இருக்க அந்நிய ஆலிவ்ஆயில் எதற்கு * தேங்காயெண்ணை இருக்க பாராசூட் ஆயில் எதற்கு * இயற்கை மா, பலா, வாழை, கொய்யா இருக்க, வெளிநாட்டு ஆப்பிள், கிவி, ஆப்ரிகார்ட் எதற்கு * நம்மூர் நிலக்கடலை இருக்க, பாதாம், பிஸ்தா எதற்கு * சத்துமிக்க கம்பு, கேழ்வரகு, சோளம் சிறுதானியங்கள் இருக்க, வெளிநாட்டு ஹார்லிக்ஸ், காம்பிளான், பூஸ்ட், போர்ன்விட்டா எதற்கு * நம்மூர் நாட்டுமாடுகள் இருக்க, அரக்கனான ஜெர்சி மாடுகள் எதற்கு * கறந்த பால் இருக்க, கலப்பட பாக்கெட் பால் எதற்கு * பாரம்பரிய சீடையும், முறுக்கும் இருக்க அந்நிய நாட்டு பிஸ்கட் எதற்கு * மின்சாரத்தைலம் இருக்க, அமர்தாஞ்சன் டைகர்பாம் விக்ஸ்வெப்போராப் எதற்கு * இட்லி, தோசை இருக்க, பிட்ச...

Urology doctors | சிறுநீரகவியல் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

Image
தலைவலி, பல்வலி போல பலரையும் பரவலாக தாக்கக்கூடிய ஒரு பிரச்சினையாக இன்றைக்கு உருவெடுத்துக் கொண்டிருக்கிறது சிறுநீரகக்கல். இந்த நோய் வருவதற்கான அறிகுறிகள், பின்னணி, சிகிச்சைகள், தவிர்க்கும் முறைகள் பற்றி பிரபல சிறுநீரகவியல் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன். சிறுநீரகத்தில், சிறுநீரில் உள்ள கிரிஸ்டல் எனப்படுகிற உப்புகள் (கால்சியம், ஆக்சலேட், யூரிக் அமிலம் ஆகியவை) ஒன்றுதிரண்டு, சிறுநீர்ப் பாதையில் பல்வேறு அளவுள்ள கற்களை உருவாக்கலாம். சிறுநீரானது சிறுநீரகத்தில் உற்பத்தியாகி, சிறுநீர்க் குழாய் வழியே சிறுநீர்ப் பைகளுக்கு வந்து பிறகு வெளியேறுகிறது. சிறுநீரகத்தில்தான் கல்லும் உற்பத்தியாகிறது. அது அங்கேயே தங்கிப் பெரிதாகலாம். குழாய் மூலம் சிறுநீர் பைக்கு வெளியேறலாம். அல்லது அடைப்பு ஏற்படுத்தலாம். அறிகுறிகள் என்ன ? முதுகில் வலி ஆரம்பித்து, அது முன்பக்கம் வயிற்றுப்பகுதிக்குத் தாவினாலோ, அடிவயிற்றில் வலித்தாலோ, அது தொடைகள், அந்தரங்க உறுப்புகளுக்குப் பரவினாலோ, காய்ச்சல், சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் போன்றவை இருந்தாலோ சிறுநீரக்கல்லாக இருக்கலாம். தைராய்டு பிரச்சி...