The traditional rice varieties of the day in the case of the forefathers | முன்னோர்களின் வழக்கிலிருந்த அன்றைய பாரம்பரிய நெல் ரகங்கள்
#முன்னோர்களின்_வழக்கிலிருந்த_அன்றைய_பாரம்பரிய_நெல்ரகங்கள்...!!! #நெல்லின் தொடக்கம் பல்லாயிரம் ஆண்டுகளாக நெல் பயிர் சாகுபடி நமது முன்னோர்கள் செய்து வந்ததாக பல சான்றுகள் கூறுகின்றன. #தன்மை உள்ளூர் சூழல், நில அமைப்பு, காற்று, வறட்சி, பனிப்பொழிவு, வெள்ள பாதிப்பு மற்றும் பல இயற்கை சீற்றங்களை தாங்கி வளரக்கூடிய பல்வேறு வகையான பாரம்பரிய நெல் ரகங்கள் நம்மிடம் இருந்தன. #உழவர்களே விஞ்ஞானிகள் காலம் காலத்துக்கும் இந்திய உழவர்களே விஞ்ஞானிகளாக இருந்து நிலத்துக்கும் பருவத்துக்கும் பயன்பாட்டிற்கும் ஏற்ற ஒரு லட்சத்து 40 ஆயிரம் நெல் ரகங்களைக் கண்டு வைத்திருக்கிறார்கள். #விதையே ஆயுதம் ஆனால் இன்றோ நம்மிடம் மிஞ்சி இருப்பது சில ரகங்கள் ஏனைய ரகங்கள் நவீன வேளாண் புரட்சியின் மோகத்தால் அழிந்துவிட்டன. இருப்பதையாவது நாம் மீட்டெக்க வேண்டும். வளர்ந்து விளையும் வரப்புக் குடைஞ்சான், வறட்சி தாங்கி விளையும் வாடஞ்சம்பா, உடல் உழைப்புக் குறைந்தோர் விரும்பி உண்ணும் கிச்சடிச் சம்பா, சீரகச் சம்பா, அகிலம் போற்றும் ஆற்காடு கிச்சடி, நெல்லை மக்கள் தலைமுறை தலைமுறையாகப் பயிரிட்ட கொட்டாரஞ்சம்பா, நீரிழிவு நோய்க்கு மருந்தாகும். விளையு...